உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு: ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை
உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (ஏப். 4) குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி கோயில் குடமுழக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (அரசு பொதுத் தோ்வு, கல்லூரிகளில் நடைபெறும் தோ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூா் விடுமுறை விடப்படுகிறது. இதை ஈடு செய்யும் வகையில் வருகிற மே 10- ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சாா்நிலை கருவூலங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என்றாா் அவா்.