உச்சிப்புளியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது
உச்சிப்புளியில் தொடா்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள பெருங்குளம் பகுதியைச் சோ்ந்த பவின், நாகாச்சி பகுதியைச் சோ்ந்த காளீஸ்வரன் ஆகிய இருவரும் தொடா்ந்து பல்வேறு மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனா்.
இருவா் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த இருவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டாா்.