செய்திகள் :

பேட் கேர்ள் முதல் பாடல் ரிலீஸ் ஒத்திவைப்பு!

post image

நடிகர் மனோஜ் பேட் கேர்ள் படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது.

இந்தத் துக்கத்துக்கு இயக்குநர் பாரதிராஜாவுக்கு இரங்கலைத் தெரிவித்து, மரியாதை நிமித்தமாக பேட் கேர்ள் படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் டீசர் குடியரசு நாளில் வெளியாகி சர்சையான, யூடியூப் தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது.

இந்தப் படத்த்துக்கு பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

ரோட்டர்ராமில் நடைபெறவுள்ள 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரமான அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் என பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பிளாக்மெயில்!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் பிளாக்மெயில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ... மேலும் பார்க்க

பா. இரஞ்சித்தின் வேட்டுவம் அப்டேட்!

வேட்டுவம் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட... மேலும் பார்க்க

பாலஸ்தீன இயக்குநர் கைது விவகாரம்: மன்னிப்புக் கேட்ட ஆஸ்கர் விருதுக் குழு!

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத விருதுக் குழு மீது கண்டனம் வலுத்த நிலையில் அவர்கள் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டனர். இஸ்ரேல் - பாலஸ்... மேலும் பார்க்க

நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அபிநயா!

நடிகை அபிநயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அ... மேலும் பார்க்க

சவுண்டை ஏத்து மாமே! அனிருத் குரலில் குட் பேட் அக்லி புதிய பாடல்!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது.குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியான முதல் பாடலான ஓஜி சம்பவம் ரசிகர்களைக் கவர்ந்தது.இந்த ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம் தொடரும் மீட்புப் பணிகள் - புகைப்படங்கள்

7.7 மற்றும் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.நிலநடுக்கத்தால் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதும், 2000க்கும் அதிகமானவர்கள... மேலும் பார்க்க