ஃபைனல் டெஸ்டினேசன் ப்ளட்லைன்ஸ் - டிரைலர் வெளியீடு!
‘ஃபைனல் டெஸ்டினேசன் ப்ளட்லைன்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஃபைனல் டெஸ்டினேசன் வரிசை படங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர்.
நாவல் மற்றும் காமிக்ஸ் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஹாரர் \ திரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படங்கள் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டன.
ஃபைனல் டெஸ்டினேசன் முதல் பாகம் கடந்த 2000- ஆம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் 2003, 2006, 2009, 2011 ஆம் ஆண்டுகள் வெளியாகின.
கடைசி பாகம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்து 6-வது பாகமான ‘ஃபைனல் டெஸ்டினேசன் ப்ளட்லைன்ஸ்’ இந்தாண்டு வெளியாகிறது.
வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸாச் லெபோஸ்கி மற்றும் ஆடம் ஸ்டைய்ன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
‘ஃபைனல் டெஸ்டினேசன் ப்ளட்லைன்ஸ்’ திரைப்படம் வருகிற மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
விடாமல் துரத்தும் மரணம். 'ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்' திரைப்படத்தின் புதிய தமிழ் டிரெய்லரை காணுங்கள் - மே 16, 2025 அன்று உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில். In English, Hindi, Tamil & Telugu. Also in IMAX. pic.twitter.com/n2Ioo2xuHe
— Warner Bros. India (@WarnerBrosIndia) March 25, 2025