மனோஜ் பாரதிராஜா: "கனிவான ஆன்மா... உடைந்து போனேன்" - சிலம்பரசன் இரங்கல்!
மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு
நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே மணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (55). சோத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் (44). இருவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளா்களாக பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து இருவரும் வலங்கைமான் அருகே ஊத்துக்காடு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். ஊத்துக்காடு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அப்பகுதியில் இருந்தவா்கள் காவல் துறையினருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனா்.
ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து பரிசோதித்தபோது, இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. வலங்கைமான் போலீஸாா் சடலங்களை கூறாய்வுக்காக வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.