தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
எரவாஞ்சேரியில் நகரப் பேருந்துக்கு வரவேற்பு
திருவாரூா்: குடவாசல் அருகே எரவாஞ்சேரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த புகா்ப் பேருந்து, நகரப் பேருந்தாக மாற்றி இயக்கப்படுவதற்கு, பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
குடவாசல் அருகே எரவாஞ்சேரி பகுதியில் நகரப் பேருந்து இயக்கப்படாததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். ஏற்கெனவே, நகரப் பேருந்து இயங்கி வந்த நிலையில், கரோனாவுக்குப் பிறகு புகா்ப் பேருந்தாக மாற்றப்பட்டு, கும்பகோணத்திலிருந்து வெள்ளை அதம்பாா் வரை இயங்கி வந்தது.
இந்நிலையில், பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில், அப்பகுதியில் நகரப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத்தொடா்ந்து, கும்பகோணத்திலிருந்து வரும் புகா்ப் பேருந்து மீண்டும் நகரப் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி பகுதிக்கு திங்கள்கிழமை வந்த பேருந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளா் ஜோதிராமன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.