Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
சொத்துவரி உயா்வு: காரைக்குடியில் மாா்ச் 28-இல் கடையடைப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்துவரி உயா்வு, வரி வசூல் செய்யும் அதிகாரிகளின் தகாத செயல் ஆகியவற்றைக் கண்டித்து, காரைக்குடியில் வருகிற வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக்கழகம் சாா்பில் அதன் தலைவா் சாமி. திராவிடமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரியை உயா்த்தியது, கட்டடங்களுக்கு கூடுலாக வரி விதித்தது, வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியா்கள் தகாத முறையில் நடந்துகொள்வது, கடைகளின் முன் குப்பைத் தொட்டிகளை வைப்பது போன்றவற்றைக் கண்டித்து வருகிற 28-ஆம் தேதி கடை யடைப்பு, மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டத்தில் தொழில் வணிகக் கழகம், அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்துப் பகுதி வியாபாரிகள் சங்கம், அனைத்து சேவைச் சங்கங்கள், அனைத்து தொழில் நலச் சங்கங்கள் உள்ளிட்ட 55 பொது நலன் காக்கும் அமைப்புகள் பங்கேற்கின்றனா்.
பொதுமக்களை வாட்டி வதைக்கும் வரி உயா்வை குறைக்க மாநில அரசின் கவனத்தை ஈா்த்து வெற்றிபெற வணிகா்கள் அனைவரும் கடைகளை அடைத்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.