கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!
பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார்.
தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கௌரி அனில் சம்ப்ரேக்கர் வேலை தேடியுள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
கடந்த 25-ம் தேதி மகாராஷ்டிராவிற்கு கிளம்பிச் சென்ற ராகேஷ், நேற்று, மகாராஷ்டிரா போலீசார் மற்றும் தாங்கள் பெங்களூருவில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து, தனது மனைவியின் உடல் வீட்டில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

'தற்கொலை' என்று நினைத்து...
'தற்கொலை' என்று நினைத்துச் சென்ற போலீசார், ராகேஷ் வீட்டின் பாத்ரூமில் அவரது மனைவியின் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர்.
கௌரியின் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, ராகேஷை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர். 'எதனால் இந்தக் கொலை நடந்துள்ளது?' என்பது குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர் பெங்களூரு போலீசார்.