செய்திகள் :

காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

post image

உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சுடப்பட்ட பொன்வண்ணன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் கடந்த 27 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடை அருகே ஒரு கும்பலால் படுகொலை செய்ய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.

முத்துக்குமாரின் நண்பர் ராஜாராம் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இக்கொலை வழக்கில் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணியை துரிதப்படுத்திய மதுரை மாவட்ட போலீசார், நேற்று தேனி மாவட்டத்தில் குற்றவாளி பொன்வண்ணன் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். படுகாயமடைந்த பொன்வண்ணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடன் கைது செய்யப்பட்ட தேனியைச் சேர்ந்த பாஸ்கரன், பிரபாகரன், சிவனேஷ்வரன் ஆகியோரை இன்று உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன், மூவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து மூவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

குற்றவாளிகளைப் பிடிக்காமல் உடலை வாங்க மாட்டோம் என்று தொடர் போராட்டம் நடத்தி வந்த போலீஸ்காரர் முத்துக்குமாரின் உறவினர்கள், பேச்சு வார்த்தைக்குப்பின் நேற்று உடலைப் பெற்று உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டுசென்றனர். அங்கு காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டன.

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க

Karnataka Bank Theft: 'Money Heist' பார்த்து SBI வங்கியை கொள்ளை அடித்த மதுரை கும்பல் - பகீர் பின்னணி

மதுரையைச் சேர்ந்த விஜய்குமார், அஜய்குமார் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா தாவங்கேர் மாவட்டத்தில் இருக்கும் நியாமதி தலுகாவிற்கு பிழைப்புக்காகச் சென்று ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளனர். கட... மேலும் பார்க்க

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி

மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற... மேலும் பார்க்க

கள்ள நோட்டல்ல, கலர் நோட்டு - தப்பிய விசிக கடலூர் மாவட்ட பொருளாளர்; சிக்கிய துப்பாக்கிகள் - பின்னணி?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவரும் ஆவட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர... மேலும் பார்க்க

நெல்லை: 3 மாதங்களில் 41 பேருக்கு ஆயுள் தண்டனை; வழக்குகளை முடிப்பதில் தீவிரம் காட்டும் போலீஸார்

தென் மாவட்டங்களில் பதற்றமான ஊர்கள் நிறைந்தது நெல்லை மாவட்டம். ஆனால், போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, குற்றவாளிகளை கைது செய்தல், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருதலில் போலீஸார் ஒருங்கிணைந்து திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிய இயக்குநர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் சமீபத்தில் நடந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்பனை செய்து மோனலினா போஸ்லே என்ற பெண் பிரபலம் அடைந்தார். அப்பெண் சமூக வலைத்தளத்தில் பிரபலம் அடைந்ததால், அவர் இப்... மேலும் பார்க்க