2 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்த சிக்கந்தர்!
சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படம் 2 நாள்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.
நடிகர் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் கடந்த மார்ச்.30இல் திரையரங்குகளில் வெளியாகியது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அகிரா படத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் காஜல் அகர்வால், சத்யராஜ், ஷர்மன் ஜோஹி, பரடீக் பாபர், அன்ஜினி தவான், ஜதின் சர்னாவும் நடித்துள்ளார்கள்.
நீண்டகாலமாக ஹிட் இல்லாமல் இருக்கும் சல்மான் கானுக்கு இப்படம் வெற்றியைக் கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், கதை மற்றும் திரைக்கதை சொதப்பலால் இப்படம் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.105.89 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Eid was special, only because of your love! We're truly grateful! ♥️
— Nadiadwala Grandson (@NGEMovies) April 1, 2025
Watch #Sikandar in your nearest cinemas TODAY!
Book your tickets NOW! https://t.co/MTFRl0Cw0yhttps://t.co/Hkghlbhdss@BeingSalmanKhan In #SajidNadiadwala’s #Sikandar
Directed by @ARMurugadoss… pic.twitter.com/En0ejoKYRl