வீர தீர சூரன் - இதுவரை வசூல் எவ்வளவு?
விக்ரம் நடித்த வீர தீர சூரன் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. அதிரடியான ஆக்சன் படமான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது.
முக்கியமாக, கடந்த 10 ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விக்ரமுக்கும் திருப்புமுனையான படம் என்றே அவரின் ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், இப்படம் முதல் 5 நாள்களில் தமிழகத்தில் ரூ. 37 கோடியையும் உலகளவில் ரூ. 45 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வார வெளியீடாக பெரிய படங்கள் எதுவும் இல்லையென்பதால் இப்படம் தமிழகத்தில் விரைவாக ரூ. 50 கோடி வசூலிக்கும் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: வின்டேஜ் சியான்! வீர தீர சூரனுக்கு நன்றி: துருவ் விக்ரம்