செய்திகள் :

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

post image

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கிய 2000-க்கும் அதிகமானோர் பரிதாமாக உயிரிழந்தனர். இந்தச் சோகத்திலிருந்தே இன்னும் மீளாத நிலையில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல்களை ஜப்பான் நாடு தெரிவித்திருக்கிறது.

ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுள்ள ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 3-ஆவது முறையாக என்னை அமெரிக்க அதிபராக்க மக்கள் விருப்பம்! -டிரம்ப் சொல்வது சாத்தியமா?

இந்த நிலநடுக்கம் யாரும் எதிர்பார்த்திடாத பேரழிவுகளைத் தரும் சுனாமிகளைத் தூண்டக்கூடும் என்றும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழும் என்றும் ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இந்த பேரழிவால் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகப் போகவும் வாய்ப்புள்ளது என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியாக 270.3 டிரில்லியன் யென் அல்லது எதிர்பார்க்கப்படும் பொருளாதார சேதம், முந்தைய மதிப்பீடான 214.2 டிரில்லியன் யென்களைவிட அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி (69) உடல்நிலை பாதிப்பு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்... மேலும் பார்க்க

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரியாவுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 17.7 லட்சம் வெளிநாட்டவர்கள் ம... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியில... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும... மேலும் பார்க்க

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப... மேலும் பார்க்க