செய்திகள் :

குட் பேட் அக்லி கால அளவு இவ்வளவுதானா?

post image

குட் பேட் அக்லி திரைப்படத்தின் கால அளவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளது.

படத்தின் டீசர் மற்றும் ஓஜி சம்பவம், காட் பிளஸ் யூ ஆகிய பாடல்கள் என ஒவ்வொன்றும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் ஏப். 10 ஆம் தேதி வெளியாகும் படத்திற்கு இப்போதே கொண்டாடட்டங்கள் ஆரம்பித்துவிட்டன.

நீண்ட காலம் கழித்து ரசிகர்களுக்கான படத்தில் அஜித் நடித்திருப்பதால் இப்படத்தை முதல்நாள் முதல் காட்சியே பார்க்க பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

உறுதியாக, முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் பெறும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் சென்சார் செய்யப்படாத கால அளவு 2.18 மணி நேரம்தானாம். சென்சார் செய்யப்பட்டால் 2.15 மணி நேரமாக மாறவே வாய்ப்பு அதிகம்.

அஜித் இறுதியாக நடித்த துணிவு (2. 26), விடாமுயற்சி (2.30) மணி நேரங்கள் கொண்ட படமாக இருந்தன. ஆனால், குட் பேட் அக்லி குறைவான கால அளவையே கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கு சின்ன ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், 3 மணி நேர படங்கள் சலிப்பை ஏற்படுத்தி விடுவதால் படக்குழு எடுத்த முடிவு சரியானது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: வீர தீர சூரன் - இதுவரை வசூல் எவ்வளவு?

நானியின் ஹிட் 3: முதல் பாடல்!

நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ... மேலும் பார்க்க

தயாராகிறது ‘ஜான் விக் 5’: கீனு ரீவ்ஸுடன் அனா டீ ஆர்மஸ்?

பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் நடிப்பில் ஜான் விக் 5 படம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஜான் விக் படங்களுக்கென்று சினிமா உலகில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவும் கடைசி பா... மேலும் பார்க்க

உடை மாற்றும்போது இயக்குநர் அத்துமீறினார்: ஷாலினி பாண்டே

இயக்குநர் ஒருவர் தான் உடைமாற்றும்போது அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.தமிழ், தெலுங்கில் அறியப்படும் நாயகியாக இருப்பவர் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியள... மேலும் பார்க்க

அதிக திரைகளில் வெளியாகும் கராத்தே கிட் லெஜண்ட்ஸ்!

நடிகர் ஜாக்கி ஜான் நடிப்பில் உருவான கராத்தே கிட் லெஜண்ட்ஸ் அதிக திரைகளில் வெளியாகிறது.நடிகர் ஜாக்கி ஜான், ஜேடன் ஸ்மித் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தி க... மேலும் பார்க்க

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!

சின்ன திரை நடிகை மதுமிதா படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இது தொடர்பான விடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடித்ததன்... மேலும் பார்க்க

வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

சின்ன திரை நடிகை டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கும் ஆடுகளம் தொடர், வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகவுள்ளது.சன் தொலைக்காட்சியில் ஏப். 8ஆம் தேதி திங்கள் கிழமைமுதல் இரவு 10 மணிக்கு ஆடுகளம் தொடர் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க