கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
முதல்வர் யோகியின் நல்லாட்சி; விமர்சிக்கும் இணையவாசிகள்!
ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் ஒன்றிணைந்தால்தான், நல்லாட்சி அமையும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் `விகாஸித் பாரத் இளைஞர் நாடாளுமன்ற விழா 2025’ குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். உரையில் அவர் தெரிவித்ததாவது, ``ஒவ்வொரு துறையிலும் தலைமைத்துவ குணங்களை வளர்ப்பதுதான் இதன் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் இளைஞர்கள், வெறும் பங்கேற்பாளர்கள் மட்டுமாக இல்லாமல், சமூகத்துக்கு உத்வேகம் அளிக்கும் சில நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் நல்லாட்சி நிகழ்கிறது. மூவரும் இணைந்து செயல்படும்போது, அது நல்லாட்சியின் இலக்கை அடைய உதவுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் இந்த மூன்று தூண்களால் இயக்கப்படுகிறது’’ என்று கூறினார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உரைக்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகளவிலான குற்ற வழக்குகள் பதிவாவதாகவும் சமூக வலைதளங்களில் புள்ளி விவரங்களை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டில் நாட்டில் பதிவான 35 லட்ச குற்ற வழக்குகளில் 4 லட்ச வழக்குகளில் உத்தரப் பிரதேசத்தில் பதிவானவை என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 65,743 என்றும் புள்ளி விவரங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க:அண்ணாமலையை செட் செய்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா!