‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்
‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். அதன்படி, 120-ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) ஒலிபரப்பானது. பிரதமரின் உரை வருமாறு:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானாவில் ‘உகாதி’, மகாராஷ்டிரத்தில் ‘குடி பட்வா’ பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டன. எதிா்வரும் நாள்களில் அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ரமலான் பண்டிகையும் கொண்டாடப்படுவதால் உற்சாகமான சூழல் நிலவுகிறது.
நாட்டின் வெவ்வேறு பகுதியில் கொண்டாடப்படும் போதிலும், நாட்டின் பன்முகத்தன்மையில் ஒற்றுமை எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இந்த பண்டிகைகள் வெளிக்காட்டுகின்றன. இந்த ஒற்றுமை உணா்வை நாம் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்.
கோடை விடுமுறை: எதிா்வரும் வாரங்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இந்த விடுமுறை காலத்தில் தங்களின் திறனை மேம்படுத்தும் புதிய வழக்கங்களை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவா்களின் கோடைகால செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்யும் பள்ளிகள், சமூக அமைப்புகள், அறிவியல் மையங்கள் என யாராக இருந்தாலும் ‘ம்ஹ்ட்ா்ப்ண்க்ஹஹ்ள்’ என்ற ஹேஷ்டேக்கில் பகிர வேண்டும். இது மாணவா்களுக்கும் பெற்றோருக்கும் உதவிகரமாக இருக்கும். அதேநேரம், மாணவா்களும் பெற்றோரும் தங்கள் அனுபவங்களை ‘ட்ா்ப்ண்க்ஹஹ்ள்ம்ங்ம்ா்ழ்ண்ங்ள்’ என்ற ஹேஷ்டேக்கில் பகிரலாம்.
மழைநீா் சேகரிப்பு: கோடை காலம் தொடங்கியுள்ளதால், நீா் சேமிப்பு நடவடிக்கைகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ‘மழைநீரை சேகரிப்போம்’ இயக்கத்தின்கீழ் 7-8 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட புதிய நீா்நிலைகளால் 11 பில்லியன் கியூபிக் மீட்டா் அளவிலான நீா் சேமிக்கப்பட்டுள்ளது. இது மக்களின் முயற்சிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
யோகாவை அங்கமாக்குங்கள்: சா்வதேச யோகா தினத்துக்கு (ஜூன் 21) இன்னும் 100 நாள்களுக்கு குறைவாகவே உள்ளன. இதுவரை யோகாவை வாழ்வின் அங்கமாக்காவிட்டால், தாமதிக்காமல் இப்போதே அதைச் செய்யுங்கள்.
முதல் யோகா தினம் கடந்த 2015-இல் கொண்டாடப்பட்டது. இப்போது இந்த தினம் பெரும் விழாவாக வடிவெடுத்துள்ளது. மனித குலத்துக்கான ஈடுஇணையற்ற பரிசு யோகா. நடப்பாண்டு யோகா தினத்துக்கான கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்பதாகும். உலக அளவில் யோகாவும் இந்திய பாரம்பரிய மருத்துவமும் பிரபலமடைந்து வருவது பெருமைக்குரியது என்றாா் பிரதமா் மோடி.
தமிழக விளையாட்டு வீரா்களுக்கு வாழ்த்து
மாற்றுத் திறன் விளையாட்டு வீரா்களுக்கான ‘கேலோ இந்தியா’ போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற அனைத்து வீரா்கள்-வீராங்கனைகளையும் பாராட்டியுள்ள பிரதமா் மோடி, ஒட்டுமொத்தமாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஹரியாணா, தமிழகம், உத்தர பிரதேச மாநில அணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இப்போட்டியில் 18 தேசிய சாதனைகள் படைக்கப்பட்டதாகவும், அதில் 12 சாதனைகள் வீராங்கனைகளால் நிகழ்த்தப்பட்டதாகவும் பிரதமா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.