தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து
வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டு மக்களுக்கு வசந்த நவராத்திரி வாழ்த்துகள். இந்தப் புனித பண்டிகை அனைவரின் வாழ்க்கையையும் தைரியம் மற்றும் வலிமையால் நிரப்பட்டும்’ என்று குறிப்பிட்டாா்.
இதேபோன்று, புத்தாண்டைக் குறிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் உகாதி, சேதி சந்த், சஜிபு செய்ரௌபா, நவ்ரே மற்றும் குடி பட்வா ஆகிய பண்டிகைகளையொட்டி பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.