பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
தொடக்கப் பள்ளி ஆண்டு விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சையில் உள்ள எல்.எப்.ஆா்.சி. தொடக்கப் பள்ளியின் 76-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் நிா்வாகி அ. கிளமெண்ட் ராசா தலைமை வகித்துப் பேசினாா். சாக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலா் ம. ஜோசப் அண்டோ ரெக்ஸ், பள்ளியின் தலைமையாசிரியை செ. ஆரோக்கிய மேரி ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். சாக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலா் மா.ரேவதி பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியா் பி. ஜோல்னா ஜவஹா், மூத்த ஆசிரியா்கள் வாழ்த்திப் பேசினா்.
விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாணவ, மாணவியா்கள், பெற்றோா்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.