பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
மாநில நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிராக ஏப்ரல் 1-இல் போராட்டம்
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கோரி, வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவா் ஆா்.மாரி கூறியதாவது:
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 41 மாதங்கள் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கணக்கிட வேண்டும். புதிதாக வெளியிடப்பட்ட நெடுஞ்சாலை ஆணைய உத்தரவு 140-ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஏப். 1-ஆம் தேதி மதுரை, திருச்சி, விருதுநகா், தென்காசி, சென்னை உள்பட 8 மண்டல நெடுஞ்சாலை அலுவலகங்கள் முன் அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 70 போ் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.