செய்திகள் :

திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

post image

மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியைத் தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக 2022-ல் தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி கிராமத்தில் உள்ள 12 ஏக்கர் பரப்பை 2 ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வீரணன் கோயில்

அதில் அழகர்கோவில் வனச்சரகத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் கலாக்காய், சிறிய ஆமணக்கு உள்பட 22 வகையான புதர் செடிகள்,

அழிஞ்சி, இரும்புளி, பூந்திக்கொட்டை மரம் உள்பட 48 வகையான மரவகை,

ஓணான்கொடி, ஓடான் கோடி, வக்கனத்தி உள்பட 21 வகையான கொடிகளும்,

சிறுகுறுஞ்சான், நன்னாரி, ஓரிதழ் தாமரை உள்பட 29 வகையான குறுஞ்செடிகள் உள்ளன.

மேலும், வால்காக்கை, நீலத் தொண்டை ஈ பிடிப்பான், தேன் சிட்டு உள்பட 12 வகையான பறவை இனங்கள், சிறிய அளவிலான பாலூட்டி விலங்குகள், ஊர்வன, பூச்சிகளின் வாழ்விடமாக உள்ளது.

தற்போது அரசு பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மேலும் பல வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காடு

தமிழக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வனத்துறைச் செயலரான சுப்ரியா சாகு, எக்ஸ் பக்கத்தில், "காசம்பட்டி பல்லுயிர் தளத்தின் மூலம் விவசாயிகள் பெருமளவில் நன்மை அடைவார்கள். பறவைகள், பூச்சிகள் உள்ளிட்டவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நன்றாக நடக்கும். மண்வளம் மேம்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஊட்டி: தரிசு நிலம் டு ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டம்; அசத்தும் ஆனைப்பள்ளம் பழங்குடிகள்!

ஆங்கிலேயர்களால் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மேலை நாட்டுக் காய்கறி சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆறுகளின் ஊற்றுக்கண்ணாக இருந்து வ... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஆர்.செந்தமிழ்ச்செல்வன், வடுகக்குடி, தஞ்சாவூர். 96885 25605 நல்ல நிலையில் உள்ள பழைய டிராக்டர். மதுகண்ணன்,சிவகங்கை. 96550 16306 கீழாநெல்லி, துத்தி, தும்பை, அம்மான் பச்சரிசி, ஆவாரம்பூ... மேலும் பார்க்க

முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழு; கேரள அதிகாரிகளை நீக்கக் கோரி தமிழக விவசாயிகள் போராட்டம்!

தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதாக பலமுறை நிபுணர் குழுவால் நிரூபிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெ... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் செலவு செய்தும் வீண் - டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த திருப்பூர் விவசாயி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந... மேலும் பார்க்க

Garlic: ரூ.600-லிருந்து 60-க்கு சரிந்த ஊட்டி மலை பூண்டு - காரணம் இதுதான்!

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு பயிர்களுக்கு அடுத்தபடியாக பூண்டு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊட்டியில் விளைவிக்கப்படும்... மேலும் பார்க்க

LIVE TN Budget 2025-26 : வேளான் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் MRK பன்னீர் செல்வம்!

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்!MRK பன்னீர் செல்வம்தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சு... மேலும் பார்க்க