ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உம்ரான் மாலிக்; கேகேஆர் அணியில் மாற்று வீரர் சேர்ப்ப...
Garlic: ரூ.600-லிருந்து 60-க்கு சரிந்த ஊட்டி மலை பூண்டு - காரணம் இதுதான்!
நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு பயிர்களுக்கு அடுத்தபடியாக பூண்டு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊட்டியில் விளைவிக்கப்படும் மலை பூண்டிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைப்பதால்

அதிக பரப்பளவில் பூண்டு பயிரிட்டு சந்தைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பூண்டு விலை உச்சத்தில் இருந்த வந்த காரணத்தால் கடந்த போகத்தில் பூண்டு பயிர் சாகுபடி பரப்பளவு பல ஆயிரம் ஏக்கராக உயர்ந்திருக்கிறது. தற்போது அதிளவில் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், ஒரு கிலோ 60 ரூபாய்க்கு ஏலம் விடப்படுகிறது.
சாகுபடி பரப்பளவு எகிறியது
இந்த விலை வீழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த ஊட்டி விவசாயிகள், " 200 ரூபாயில் இருந்த ஊட்டி பூண்டின் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த ஆண்டு 600 ரூபாயாக உயர்ந்தது. சில சமயங்களில் 700 , 800 வரை ஏலம் விடப்பட்டு உச்சத்தை எட்டியது. இதைப் பார்த்த விவசாயிகள் பலரும் 400 முதல் 600 ரூபாய் வரை விலை கொடுத்து விதை பூண்டை வாங்கி பயிரிட்டனர். பார்க்கும் இடமெல்லாம் பூண்டு பயிர்கள் எனும் அளவுக்கு சாகுபடி பரப்பளவு எகிறியது. ஒரே சமயத்தில் டன் கணக்கில் அறுவடையும் நடைபெற்று வருகிறது.

மொத்த ஏல மண்டிகளில் விற்பனை செய்ய முடியாத அளவிற்கு பூண்டு வரத்து அதிகரித்திருக்கிறது. மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளில் இருந்து பல டன் பூண்டினை விதைக்காக வாங்கிச் செல்வார்கள். இந்த முறை அங்கிருந்தும் வியாபாரிகள் வரவில்லை. இதுபோன்ற காரணங்களாலேயே தற்போது ஒரு கிலோ பூண்டு 60 ரூபாயாக சரிந்திருக்கிறது. அடுத்த போகத்தில் வட மாநிலங்களில் விதை தேவை இருப்பதால் விலை சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது " என்றனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks