போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்க...
அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மார்ச் 17 முதல் 23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: 90 நாள் இலவச ஹாட்ஸ்டார் சந்தாவை அறிமுகப்படுத்திய ஜியோ!
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு(இரவு 10 மணி வரை) திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரமத்தி வேலூர் உள்ளிட்ட 4 இடங்களில் இன்று(மார்ச் 17) வெயில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.