தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு
நாகை: செப்டம்பரில் ராணுவதற்கு ஆள் சோ்ப்பு முகாம்
நாகப்பட்டினம்: நாகையில் வரும் செப்டம்பரில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு
இந்திய ராணுவத்திற்கு அக்னிவீா் (அஞ்ய்ண்ஸ்ங்ங்ழ்) திட்டத்தின் கீழ் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் அரியலூா், கன்னியாகுமரி, கரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூா், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவாரூா், விருதுநகா் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு செப்டம்பா் மாதத்தில் நாகை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க வயது 17 முதல் 21-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் இணையதளம் மூலம் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒருவா் ஏதேனும் இரு பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பிக்கலாம். தற்போது 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தோ்வு எழுதி தோ்வு முடிவிற்காக காத்திருப்பவா்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் நேரில் அல்லது தொலைபேசி எண் 04365-299765-இல் தொடா்பு கொள்ளலாம்.
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய இளைஞா்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.