செய்திகள் :

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

post image

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு கடந்த 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சகம் குறித்த விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதிகரித்த பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்பட ரயில்வேயின் பல சாதனைகளைப் பட்டியலிட்டு விவாதத்தில் பேசிய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘கரோனா பெருந்தெற்று சவால்களை ரயில்வே வெற்றிகரமாக சமாளித்துள்ளது. மக்கள் மீண்டும் ரயில் பயணத்துக்குத் திரும்புகின்றனா். பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டும் வளா்ச்சியைக் குறிக்கிறது.

வரவு, செலவு: கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில், இந்திய ரயில்வே சுமாா் ரூ.2.78 லட்சம் கோடி வருவாயை ஈட்டியது. அதே காலகட்டத்தில் ரூ.2.75 லட்சம் கோடி செலவிடப்பட்டது. அதில் ஊழியா்களுக்கான சம்பளம் (ரூ.1.16 லட்சம் கோடி), ஓய்வூதிய செலவுகள் (ரூ.66,000 கோடி), எரிசக்தி செலவுகள் (ரூ.32,000 கோடி) மற்றும் நிதிச் செலவுகள் (ரூ.25,000 கோடி) ஆகியவை அடங்கும்.

சிறந்த செயல்திறன் காரணமாக ரயில்வே தனது சொந்த வருமானத்தில் இருந்து அதன் செலவுகளை நிறைவேற்றிக்கொள்கிறது. ஒட்டுமொத்தமாக, இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவாக உள்ளது. நாங்கள் அதை தொடா்ந்து மேம்படுத்த முயற்சிக்கிறோம்.

பயணிகளுக்கு ரூ.57,000 கோடி மானியம்: சரக்கு போக்குவரத்தில் இருந்து ரயில்வே வருவாய் ஈட்டும் அதேவேளையில், பயணிகளுக்கான கட்டணங்களில் தொடா்ந்து மானியம் வழங்கப்படுகிறது.

ஒரு கி.மீ.-க்கான உண்மையான செலவு ரூ.1.38-ஆக இருந்தாலும், பயணிகளிடமிருந்து 72 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2023-24 ஆம் ஆண்டில் பயணிகள் கட்டணத்தில் வழங்கப்பட்ட மொத்த மானியம் தோராயமாக ரூ.57,000 கோடி ஆகும்.

குறைந்த கட்டணம்: அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரயில் கட்டணங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. 350 கி.மீ பயணத்துக்கு இந்தியாவில் பொது வகுப்புக் கட்டணம் ரூ.121 ஆகும். இதே தொலைவுக்கு பாகிஸ்தானில் ரூ.400, இலங்கையில் ரூ.413 என்று வசூலிக்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு ரயில் கட்டணங்கள் மாற்றப்படாமல் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

2019-க்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட ரயில் வழித்தட மின்மயமாக்கல் முயற்சிகள் நிதி ரீதியாக பயனளித்துள்ளன. இதனால் எரிசக்தி செலவுகள் ரூ.30,000-32,000 கோடியாக நிலையானதாக உள்ளது.

சாதனைகள்...: வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் (நடப்பு நிதியாண்டு இறுதி) 160 கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்குப் பிறகு உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இருக்கும். மேலும், இந்த ஆண்டு சுமாா் 1,400 ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்படும்

இதைத் தவிர ரயில்வே துறையில் பிற முக்கிய சாதனைகளில் சுமாா் 50,000 கி.மீ. தண்டவாளங்களை மாற்றியமைத்தல், ரயில் பாதையில் 12,000-க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுதல், 14,000 பாலங்களை மீண்டும் கட்டுதல் மற்றும் 41,000 ‘எல்.எச்.சி.’ ரயில் பெட்டிகளின் உற்பத்தி, மெட்ரோ ரயில் பெட்டிகளின் ஏற்றுமதி ஆகியவை அடங்கும்.

பொய் குற்றச்சாட்டுகள்: ரயில்வேயில் உள்ள 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களில் 40 சதவீதமான 5 லட்சம் போ் கடந்த பத்து ஆண்டுகளில் பணியமா்த்தப்பட்டவா்கள். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புதியவா்களைப் பணியமா்த்தும் நடவடிக்கை நடந்து வருகிறது.

தில்லி ரயில் நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடா்பான சிசிடிவி காட்சிகள் உள்பட அனைத்து தரவுகளும் பாதுகாப்பாக இருக்கிறது. உயா்நிலைக் குழு இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. இந்த விஷயங்கள் குறித்த எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை’ என்றாா் அஸ்வினி வைஷ்ணவ்.

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

24 தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்கு: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

உ.பி.யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 18... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்

ஐஆர்சிடிசி நிலம், வேலை வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் சகோதரர் பிரபுநாத் யாதவ் பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் ச... மேலும் பார்க்க

நகைக் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய முடிவால் மக்கள் அதிர்ச்சி!

வங்கிகளில் நகைக் கடன்களில் கால அவகாசம் முடியும்போது, வட்டி மட்டும் செலுத்தி திருப்பி வைக்கும் நடைமுறையை மாற்றி, புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறையின்ப... மேலும் பார்க்க

இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!

குஜராத்தில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அகமதாபாத்தின் பல்தி பகுதியி்ல் உள்ள குடியிருப்பில் பங்குத் தரகரான மகேந்திர ஷாவின் மகன் மேக் ஷா என்பவரது வீட... மேலும் பார்க்க