செய்திகள் :

பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!

post image

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பிரிட்டன் போரின் கடைசி விமானி ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 105.

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் பிரிட்டன் ராணுவத்தினர் சரணடைய நிர்பந்திக்கப்பட்ட நிலையில் நாஜி படைகளை எதிர்த்துப் போராடிய ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களில் கடைசி விமானியான ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். 1940 ஆம் ஆண்டு நாஜி படைகளை எதிர்த்துப் போராடிய ஜான் ஹெமிங்வேவுக்கு அப்போதய வயது 20 தான்.

இதையும் படிக்க: தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

1919 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்போதைய அயர்லாந்தின் தலைநகர் டப்ளினின் ராத்மைன்ஸ் பகுதியில் ஜான் ஹெமிங்வே பிறந்தார். பின்னர் 1938 ஆம் ஆண்டு பிரிட்டனின் ராயல் விமானப்படையில் விமானியாக சேர்ந்தார்.  

பிரான்சின் மீதான நாஜி படையெடுப்பின் போது, ​​பின்வாங்கும் பிரிட்டிஷ் படைகளுக்கு போர் விமானங்களின் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றினார். போரின் முடிவில், ஹெம்மிங்வே வடக்கு இத்தாலியில் ஸ்பிட்ஃபயர்ஸை இயக்கிய எண். 43 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். 30 ஆண்டுகள் பணியாற்றிய ஜான் ஹெமிங்வே 1969 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

இங்லீஷ் கால்வாய் கடற்கரையில் பிரிட்டன் போரில் பங்கேற்ற 2,941 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ஜான் பெயரும் இடம்பெற்றுள்ளது.

1940 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிரான நாய்ச்சண்டை எனப்படும் போரில் ஜான் சிறப்பாக பணியாற்றினார். இதனால், இவருக்கு 1941 ஆம் ஆண்டு அவரின் வீரத்துக்காக பறக்கும் சிலுவை விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தெற்கு ஸ்பெயினில் கடும் வெள்ளம்! நிரம்பிய நீர்நிலைகள்...மக்கள் வெளியேற்றம்!

பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூம... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் பேச்சு: உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது 30 நாள்களுக்கு ரஷிய தாக்குதல் நிறுத்தம்?

வாஷிங்டன்/மாஸ்கோ: அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தொலைபேசியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரஷிய அதிபா் புதின் செவ்வாய்க்கிழமை பேசியதைத் தொடா்ந்து, உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்... மேலும் பார்க்க

முறிந்தது காஸா போா் நிறுத்தம்! இஸ்ரேல் தாக்குதலில் 404 போ் உயிரிழப்பு

டேய்ா் அல்-பாலா: காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 404 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அங்கு கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் அமலில் இருந்த போா் நிறுத்த ... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் ஒருவா் உயிரிழந்தாா். இது குறித்து அந்த நாட்டு வானிலை, பருவவியல், புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வடக்கு சுமாத்ரா மாகாணத்... மேலும் பார்க்க

பைடன் மகன், மகளுக்கு பாதுகாப்பு வாபஸ்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடனின் மகன், மகளுக்கு அளிக்கப்பட்டுவந்த உயா்நிலைப் பாதுகாப்பை ரத்து செய்து தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் கூறியதாவது: முன... மேலும் பார்க்க

ரஷியா -உக்ரைன் போர்: டிரம்புடன் தொலைபேசியில் பேசிய புதின்!

ரஷியா -உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மார்ச் 12 ஆம் த... மேலும் பார்க்க