கவுன்சிலரிடையே மோதல்; மேசையை தூக்கிவீசி அமளிதுமளி- களேபரமான சிவகாசி மாமன்ற கூட்ட...
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்
ஐஆர்சிடிசி நிலம், வேலை வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் சகோதரர் பிரபுநாத் யாதவ் பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபுநாத் கூறுகையில்,
பாஜகவில் சேரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தூய்மையாகிறார்கள், அதேநேரத்தில் லாலு யாதவ் தனது சித்தாந்தத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாததால் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள்.
ஊழல் வழக்குகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட போதிலும், மத்திய அமைப்புகளால் விசாரிக்கப்படாத அஸ்ஸாம் முதல்வர் போன்ற தலைவர்களை அவர் சுட்டிக்காட்டினார்.
லாலு பிரசாத் யாநதவ் பிற்படுத்தப்பட்ட தலைவர், எனவே பாஜகவுடன் சமரசம் செய்துகொள்ளவில்லை. தலித்துகள் மற்றும் ஏழைகள் மத்தியில் அவரது புகழ் ஆளும்கட்சிக்கு இலக்காக ஆக்குகிறது. லாலு ஏழைகளின் பக்கம் நிற்பவர் என்பதால்தான் பாஜக அவரைப் பின்தொடர்கிறது என்று அவர் கூறினார்.
லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீதான அமலாக்கத்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மிசா பாரதி, தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் விசாரணைக்கு இன்று ஆஜராகினர்.
வேலைக்கு நிலம் மோசடியில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு தேஜ் பிரதாப் யாதவ் பதிலளித்தார். தேஜ் பிரதாப் யாதவை அமலாக்கத்துறை நேரடியாக விசாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தாா். அப்போது தனது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், பினாமிகள் பெயரில் லஞ்சமாக நிலங்களைப் பெற்றுக் கொண்டு ரயில்வே பணிகளை ஒதுக்கீடு செய்ததாக லாலு மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை லாலு குடும்பத்தினரைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றது.