செய்திகள் :

தருமபுரி: `கலெக்டரா இருந்தாலும் கதை முடிஞ்சது’ - 24 நாள்களில் திமுக மா.செ-வின் பதவி பறிப்பு பின்னணி

post image

தி.மு.க-வின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்த பி.தர்மசெல்வன் அதிரடியாக அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடியைச் சேர்ந்தவர் தர்மசெல்வன், தி.மு.க-வில் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், வர்த்தக அணியின் மாநில துணைச் செயலாளராகவும் இருந்துவந்தார். கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியம் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அன்றைய தினமே மாவட்டச் செயலாளர் பொறுப்பில் தர்மசெல்வனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்.

துரைமுருகன்

மா.செ பதவி கிடைத்த ஒரே வாரத்தில் தருமபுரி சட்டமன்றத் தொகுதி மற்றும் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட்டார் தர்மசெல்வன். இந்த நிலையில்தான் ``கலெக்டர், எஸ்.பி என எந்த அதிகாரியாக இருந்தாலும் நான் சொல்றதைத்தான் கேட்கணும். கேட்கலைனா, இங்க ஒரு அதிகாரி கூட இருக்க மாட்டான். எதுவாக இருந்தாலும் என்னை கேட்காம செய்யக்கூடாது. எந்த அதிகாரியாவது கேம் ஆடினால், அவன் கதை முடிஞ்சது’’ என வாய்ச்சவடால் விட்டார் தர்மசெல்வன். இந்த பேச்சு தொடர்பான குரல் பதிவு வெளியாகி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியது.

`மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலையா..?’ என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்ததோடு, ஆளும்கட்சியை நோக்கி கடும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர். தருமபுரி மாவட்ட தி.மு.க-வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், கட்சித் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

தருமபுரி எம்.பி ஆ.மணி

இந்த நிலையில்தான் மார்ச் 18-ம் தேதியான நேற்று மாலை, தர்மசெல்வனிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பை பறித்து நடவடிக்கை எடுத்திருக்கிறது அறிவாலயத் தலைமை. அவருக்குப் பதிலாக தருமபுரி எம்.பி-யும் வழக்கறிஞருமான ஆ.மணியை நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.

மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்து 24 நாள்களிலேயே தனது பதவியை பறிகொடுத்தவர் என்கிற தவிர்க்க முடியாத விமர்சன சொல்லுக்கும் ஆளாகியிருக்கிறார் தர்மசெல்வன். தர்மசெல்வன் மீதான நடவடிக்கையை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க-வினர் வரவேற்றிருக்கின்றனர். பதவி பறிபோகும் தகவல் தர்மசெல்வனுக்கே அறிவிப்பு வெளியான பிறகுதான் தெரியவந்திருக்கிறது. விளக்கம் ஏதும் கேட்காமலேயே, அவர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தலைமை அதிரடி காட்டியிருக்கிறது என்கின்றனர் விவரமறிந்த தி.மு.க-வினர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Khalistan: இந்திரா காந்தி டு மோடி; அச்சுறுத்தும் காலிஸ்தான் விவகாரம் - விரிவான அலசல்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் லண்டன் சென்றிருந்தார். அங்கே அவர் காரில் பயணித்துக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு மர்ம நபர் காருக்கு குறுக்கே பாய்கிறார். என்ன நடக்கிறதென புரியாமல... மேலும் பார்க்க

“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்...” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்து?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க“முதல்வர் சொல்லியிருப்பதில் நியாயம் இருக்கிறது. பாராளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாசித்த கடிதத்திலேயே, ‘கையெழுத்து போடுக... மேலும் பார்க்க

யார் யாருடைய B Team? | Parliament Vs TN Assembly | Modi Stalin DMK BJP Imperfect Show 18.03.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* ரூ.1000 கோடி ஊழல் புகார் ஆதாரமில்லை - ரகுபதி.* 5 மணி நேரம் கூட காவலில் இருக்க முடியாதா? - சேகர்பாபு.* தமிழ்நாட்டின் சாபக்கேடு அண்ணாமலை - அமைச்சர் சேகர்பாபு.* தமிழிசை, எ... மேலும் பார்க்க

EPS-க்கு செக் வைத்த Premalatha, பின்னணியில் Udhayanidhi ஸ்கிரிப்ட்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்'திமுக பட்ஜெட் சிறப்பாக உள்ளது' என பாராட்டியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 'கூட்டணி சம்பந்தமாக தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என எடப்பாடிக்கு செக் வைத்துள்ளார் பிரேமலதா... மேலும் பார்க்க

தென்காசி: அரசு அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட முன்னாள் முதல்வர் புகைப்படம்; அதிமுக-வினர் கண்டனம்!

தென்காசி நகரப் பகுதியில் புது பஸ்டாண்ட் செல்லும் வழியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முன்னாள், இந்நாள் தமிழக முதல்வர்களின் போட்டோக்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப... மேலும் பார்க்க