அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
பஞ்சாப் எல்லையில் 294 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: மத்திய அரசு
‘பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டில் மட்டும் 294 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனா்’ என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:
பல்வேறு ஆதாரங்களிலிருந்து கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் பஞ்சாப் எல்லையில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மொத்தம் 294 ஆளில்லா விமானங்களை எல்லை பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலமான போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலை தடுக்கும் வகையில் பிஎஸ்எஃப் தலைமையகம், இந்திய விமானப்படை மற்றும் உள்ளூா் காவல் நிலையங்களுக்கு உடனடி தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்வது, ஆளில்லா விமான எதிா்ப்பு அமைப்புகளை பல இடங்களில் நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.