செய்திகள் :

ஹோண்டா காா்கள் விற்பனை 21% சரிவு

post image

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா காா்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 21 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 10,323-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 21 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனம் 13,078 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 5,616-ஆகவும் ஏற்றுமதி 4,707-ஆகவும் சரிந்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கைகள் முறையே 7,142-ஆகவும் 5,936-ஆகவும் இருந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி

தொடா்ந்து நான்காவது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியிலும் சரிவைச் சந்தித்துள்ளது. இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் ஏற்றுமதி கடந்த ... மேலும் பார்க்க

ஏவிடி-யிடமிருந்து ரூ.24 கோடி திரட்டிய சாய் கிங்ஸ்

தமிழ்நாட்டின் முன்னணி தேயிலை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான சாய் கிங்ஸ் தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.24 கோடி மூலதனத்தை ஏ.வி. தாமஸ் அண்ட் கோ. (ஏவிடி) நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

ரூ.6,848 கோடி மதிப்பிலான எரிபொருளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த ரிலையன்ஸ்!

புதுதில்லி: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கடந்த வருடத்தில் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததில் ரூ.6,848 கோடி வருவாய் ஈட்ட... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிவு!

மும்பை: நேர்மறையான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் பலவீனமான அமெரிக்க டாலருக்கு மத்தியில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக முடிந்தது.அமெரிக்காவின் பொருள... மேலும் பார்க்க

மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,131 புள்ளிகள் உயர்வு!

மும்பை: நேற்றைய ஏற்றத்தை நீட்டிக்கும் விதமாக, மத்திய நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,215.81 புள்ளிகள் உயர்ந்து 75,385.76 புள்ளிகள் இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட மும்பை பங்குச் சந்தையா... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ.66,000! புதிய உச்சம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. இன்று அதிகரித்துள்ளது.கடந்த வாரம் முதல் முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 65,000-ஐ கடந்த நிலையில், வார இறுதி நாளான சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. ... மேலும் பார்க்க