செய்திகள் :

'இந்திய ராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது'- பேரணியை அறிவித்த ஸ்டாலின்

post image

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது.

இந்தியா
இந்தியா

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட சில நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கும்  இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்த ட்ரோன்கள், போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தானின் தாக்குதல் திட்டங்களை இந்தியா திறம்பட முறியடித்து வருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். 

“தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம்” என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின... மேலும் பார்க்க

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் - செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."அன்பிற்குரிய 'தி வயர்' வாசகர்களுக்கு,இந்திய அர... மேலும் பார்க்க

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி - போர் பதட்டமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா. 'இதற... மேலும் பார்க்க

India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிர... மேலும் பார்க்க

'போர் எளிய மக்களின் உயிரை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது'- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாது... மேலும் பார்க்க