செய்திகள் :

குஜராத்தில் மே 15 வரை பட்டாசுகள், ட்ரோன்களுக்கு தடை

post image

குஜராத்தில் மே 15 வரை அனைத்து நிகழ்வுகளிலும் பட்டாசுகள், ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்த மாதம் 15 ஆம் தேதி வரை எந்த விழாக்களிலும் அல்லது நிகழ்வுகளிலும் பட்டாசுகளை வெடிக்கவோ அல்லது ட்ரோன்கள் பறக்கவிடவோ அனுமதிக்கப்படாது.

தயவுசெய்து ஒத்துழைத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த புதன்கிழமை நள்ளிரவில் முயற்சித்ததாகவும், அவை அனைத்தையும் முறியடித்துவிட்டதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிப்பு!

குஜராத்தில் கட்ச் மாவட்டத் தலைநகா் புஜ் நகரையும் தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது.

இதனிடையே கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கவாடா கிராமத்தில் ஆளில்லா சிறிய ரக விமானத்தின் (ட்ரோன்) உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன.

இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இரவில் தொடரும் ட்ரோன் தாக்குதல்

ஸ்ரீநகா் விமான நிலையம் மற்றும் அவந்திபுரா விமான தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரவும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், வடக... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு கடன்: ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடா்பாக சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்க இந்த நிதியை பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என ... மேலும் பார்க்க

எல்லையோரம் 26 இடங்களில் பாக்., ட்ரோன்கள்: ராணுவம் தகவல்

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ட்ரோன் தாக்... மேலும் பார்க்க

என் வீட்டருகே இடைவிடாது குண்டுவெடிப்பு சப்தங்கள்: முதல்வர் ஒமர் அப்துல்லா

நான் இருக்கும் இடத்தில் இடைவிடாது குண்டு வெடிப்பு சப்தங்கள் கேட்கின்றன என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜம்முவில் இப்போது மின் தடை. ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: நடுவானில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா பதிலடி!

பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.ஜம்மு - காஷ்மீரின் சம்பா, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின... மேலும் பார்க்க