எல்லையோரம் 26 இடங்களில் பாக்., ட்ரோன்கள்: ராணுவம் தகவல்
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபோரா விமான தளத்தின் மீதும் பாகிஸ்தான் ட்ரோன்களை வீசித் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது. எனினும் அவற்றை இந்திய ராணுவம் வான் பரப்பிலேயே முறியடித்துள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் வெள்ளிக்கிழமை மாலை முதலே பல்வேறு பகுதிகளில் சைரன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக தெற்கு காஷ்மீர் மற்றும் ஜம்மு பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமடி எச்சரிக்கப்பட்டது.
ஜம்முவின் சில பகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தின் சாம்பா மற்றும் பதான்கோட் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டதாக ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.