செய்திகள் :

'தி வயர்' இணைய தளத்துக்குத் தடை! முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

post image

'தி வயர்' இணைய தளத்துக்கு மத்திய அரசு தடைவிதித்தற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி இணைய தள செய்தி நிறுவனமான ’தி வயர்’ வெள்ளிக்கிழமையான இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவுகளின் படி தங்கள் வலைதளம் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இந்த நடவடிக்கையை தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. உங்கள் ஆதரவுடன் கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

இந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக நிற்போம் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் அனைத்து வாசகர்களுக்கும் உண்மையுள்ள செய்திகளை வழங்குவதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

மிகவும் பிரபல இணையதள செய்தி நிறுவனமான தி வயர் இணைய தளம் முடக்கப்பட்டதற்கு பல்வேறு ஊடகவியலாளர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நெருக்கடியான நேரங்களில் ஊடகங்களை மௌனமாக்குவது ஜனநாயகத்தின் உணர்வை குறைத்து மதிப்பிடுவதைப் போன்றதாகும். மத்திய அரசு ‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான தடையை மறுபரிசீலனை செய்து நீக்கும் என்று நம்புகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிகை பத்திரிகை சுதந்திரத்தை நெரிக்க வேண்டாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! - விக்ரம் மிஸ்ரி

ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் பேரணி

பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்திவரும் இந்திய முப்படைகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய்ஹிந்த் பேரணி’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்எ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சியடையாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத 39,352 பேருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளுக்குப் பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை... மேலும் பார்க்க

மதுரை, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

அழகா் திருவிழா மற்றும் சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து மதுரை மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

திருநெல்வேலி நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலியில் அமையவுள்ள நூலகத்திற்கு 'காயிதே மில்லத்' பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சிராப்பள்ளி, எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாளை(மே 10) இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ச... மேலும் பார்க்க