மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! - விக்ரம் மிஸ்ரி
பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் எஸ்-400 பயன்படுத்தி ஏவுகணை நடுவானிலேயே அழித்து ஒழித்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்த மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், “பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. குருத்வாரா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால், மத ரீதிலான கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது. மேலும், பொய்த் தகவல்கள் மூலம் உலகை ஏமாற்றிவருகிறது பாகிஸ்தான். மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது”என்றார்.