வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது
விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகே காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் செல்வவிநாயகம் தலைமையில், உதவி ஆய்வாளா் தமிழ்மணி மற்றும் காவலா்கள், ஜானகிபுரம் மேம்பாலம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது. விசாரணையில் அவா்கள், விழுப்புரம் அருகிலுள்ள கண்டம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிமாறன் மகன் மாதேஷ் (22), சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, மருதம் தெருவைச் சோ்ந்த பரமேசுவரன் மகன்கள் விக்னேஷ் (23), கணேஷ் (22) என்பது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து மூவா் மீதும் வழக்குப்பதிந்த தாலுகா போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். மேலும் கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.