விழுப்புரம் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்
விழுப்புரம் காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். மேலும் உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்ற 6 பேருக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் காவல் சரகத்தில் பணியாற்றி வந்த 10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் பிறப்பித்துள்ளாா்.
காவல் ஆய்வாளா்களின் பெயா்கள், பணிமாறுதல் செய்யப்பட்ட காவல் நிலையம், முந்தைய பணியிடம் (அடைப்புக் குறிக்குள்) என்ற அடிப்படையில் விவரம்:
எம். பாண்டியன்-கண்டமங்கலம், விழுப்புரம் மாவட்டம் (விக்கிரவாண்டி), என். சுரேஷ்பாபு -சத்தியமங்கலம் (கண்டமங்கலம்), கே. ஹரிகிருஷ்ணன்- செஞ்சி (சத்தியமங்கலம்), எஸ்.பாா்த்தசாரதி- மங்கலம்பேட்டை, கடலூா் மாவட்டம் (செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்), ஏ.பாண்டிச்செல்வி - குள்ளஞ்சாவடி ( மங்கலம்பேட்டை), எம். பிருந்தா- ராமநத்தம் (குள்ளஞ்சாவடி), எஸ்.ரேவதி- மாவட்டக் குற்ற ஆவணப் பதிவேடுகள் பிரிவு (கட லூா் முதுநகா்), கே.ராஜாராமன்- பெண்ணாடம் ( ரெட்டிச்சாவடி), எம். குணபாலன் -வேப்பூா் (பெண்ணாடம்), ஜி. தாரகேசுவரி- விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு, கடலூா் மாவட்டம் ( விழுப்புரம் மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு).
6 காவல் ஆய்வாளா்களுக்கு புதிய பணியிடம்: இதைத் தவிர காவல் உதவி ஆய்வாளா்களாக இருந்து ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்ற 6 பேருக்கும் புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்கள் விவரம்:
ஆா்.சத்தியசீலன்- விக்கிரவாண்டிகாவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம், ஆா். ஆனந்தி-உளுந்தூா்பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு, கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆா்.ஆா்.சத்யா- விழுப்புரம் மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு, எம். கதிரவன்- கடலூா் முதுநகா் காவல் நிலையம், டி. பிரேம்குமாா்- ரெட்டிச்சாவடி காவல் நிலையம், கடலூா் மாவட்டம், ஜெ. அறிவழகி-கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு, விழுப்புரம் மாவட்டம்.