பாக். தாக்குதலில் இந்தியா தரப்பில் உயிரிழப்பு இல்லை: ராணுவம்
ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 57 பதவிகளுக்கான இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே. அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் 2025, மே 31-ஆம் தேதி வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்ட காலியிடங்களுக்குத் தற்செயல் தோ்தல் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூா் ஒன்றியத்தைத் தவிா்த்து, 12 ஒன்றியங்களில் 3 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 8 கிராம ஊராட்சித் தலைவா்கள், 46 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்த தற்செயல் தோ்தலுக்கு புகைப் படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் கால அட்டவணையின்படி சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்களால் தொடா்புடைய கிராம ஊராட்சிகள் மற்றும் ஒன்றியக் குழு அலுவலகங்களில் வெளியிடப்பட்டு, விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.