செய்திகள் :

Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு!

post image

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.

அவரது உடல் புனித மேரி பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 9 நாள்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதற்காக 250 கார்டினல்கள் பங்கேற்றனர்.

முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கார்டினல்கள் எழுதி வைத்திருக்கும், காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்படும். இதன் மூலம் போப் தேர்வு செய்யப்படவில்லை என்பதை தெரிவிப்பார்கள்.

புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் தேவாலய சிம்னி வழியாக வெள்ளைநிற புகை வெளியேறும். அதாவது, இதன் மூலம் புதிய போப் தேர்வு செய்யப்பட்டதாக வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.

இந்த நிலையில், வாடிகனில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யப்பட்டது சற்றுமுன் உறுதியாகியுள்ளது. வெள்ளை நிற புகை வெளியேறியதை அடுத்து புதிய போப் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

``பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” - எலான் மஸ்க் எச்சரிப்பது என்ன?

ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலோன் மஸ்க், சூரியனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.சூரியனின் வெப்பத்தால் பூமி அழியலாம், எனவே செவ்வாய்கிரகத்தில் மன... மேலும் பார்க்க

`இந்தியாவுக்கு எதிரானப் போரில் எத்தனை பேர் பங்கெடுப்பீர்கள்?' - மதகுருவின் கேள்விக்கு மக்களின் பதில்

ஜம்மு காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே வார்த்தைப்போர் தொடர்ந்து வருகிறது. அதே நேரம் பாகிஸ்தானிலும் அந்த அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்திருக்கிறது. இதை தெளிவ... மேலும் பார்க்க

36 இலக்கத்தில் வங்கிக் கணக்குக்கு வந்த பணம்; சில மணி நேரத்தில் எலான் மஸ்குக்கு டஃப் கொடுத்த விவசாயி!

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் அஜித். சாதாரண விவசாயத் தொழிலாளியான இவரின் வங்கிக் கணக்கில் சில ஆயிரங்களை சேமிப்பாக வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அவரின... மேலும் பார்க்க

`house of horror' - திகில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 3 சிறுவர்கள் மீட்பு.. பகீர் வாக்குமூலம்

ஸ்பெயினின் புறநகரான ஓவியோடோவில் ஒரு வீடு. அந்த வீட்டிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. அந்த வீட்டில் அமெர... மேலும் பார்க்க

Aishwarya Rai: ``விராட் கோலியின் உறுதி, ஆக்ரோஷம் பிடிக்கும்'' - மனம் திறந்து பாராட்டிய ஐஸ்வர்யா ராய்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதன்மூலம் ஐ.பி.எல் தொடர்களில் அதிக முறை, 500 ரன்களுக்கு ... மேலும் பார்க்க

``அனுமதி வாங்கி தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்'' - டிஸ்மிஸ் ஆன CRPF வீரர் சொல்வதென்ன?

ஜம்முவை சேர்ந்த முனீர் அகமத் என்பவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2017-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மினால் கான் என்ற பென்னை 2022-ல் திருமணம் செய்தார். இந்நிலையில்... மேலும் பார்க்க