பாகிஸ்தானில் ஊரடங்கு அமல்!
புது தில்லி: பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே தீவிர சண்டை மூண்டுள்ளது. இருநாட்டு ராணுவமும் பதிலுக்குப்பதில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் போர் விமானங்களும் ஏவுகணைகளும் வானிலேயே இடைமறித்து வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையோரப் பகுதிகளில் ஆங்காங்கே இரு தரப்பினரிடையே மோதல்கள் நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய நகரங்களில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய வணிக நகரமான கராச்சியிலும் இந்திய கடற்படையினர் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், அசாதாரண சுழல் நிலவுவதால் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.