அரசா் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தா்மேந்திர பிரதான் அறிவ...
பாகிஸ்தானின் முக்கிய இடங்களைக் குறிவைக்கும் இந்தியா; ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த பாகிஸ்தான்?
இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய முக்கிய நகரங்களில் இந்தியா பதில் தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே7 ஆம் தேதி இந்திய ராணுவத்தால் ஆப்ரேஷன் சிந்தூர் நடத்திய பிறகு நேற்று இரவு திடீரென பாகிஸ்தானால் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன.
ஆனால் இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக அதனை முறியடித்தது.
குப்வாரா மற்றும் பாரமுல்லாவில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் தரப்பிலிருந்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்வாரி, சம்பா, ஆர்.எஸ். புரா மற்றும் ஆர்னியா துறைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் எட்டு ஏவுகணைகளை ஏவியிருக்கிறது. இவை அனைத்தும் இந்தியாவின் எஸ்-400 அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டுள்ளன.
லாகூர், சியால்கோட்டை தொடர்ந்து கராச்சியிலும் இந்திய இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் முழுக்க ஊரடங்கு?
இதற்கிடையே, பாகிஸ்தான் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் பிரதமர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs