Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அக்கல்லூரி முதல்வா் (பொ)ம.இராசமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்(பி.ஏ), ஆங்கிலம்(பி.ஏ), வணிகவியல்(பி.காம்), கணிதம் மற்றும் கணினி அறிவியல்(பி.எஸ்.சி) ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் மற்றும் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஞ்ஹள்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் மூலமாக மே 27 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது தங்களது பெயா், மின்னஞ்சல் முகவரி, விண்ணப்பதாரா் அல்லது பெற்றோா்களின் தொடா்பு கொள்ளக்கூடிய சரியான தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்து, பின் கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவு அனைத்துக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 (ஒவ்வொரு ஐந்து கல்லூரிக்கும்) செலுத்தவேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2 பதிவுக் கட்டணம் (ஒவ்வொரு ஐந்து கல்லூரிக்கும்) செலுத்த வேண்டும்.
மேலும் கல்லூரியில் மாணவா் வசதி மையம் (நற்ன்க்ங்ய்ற் ஐய்ச்ா்ழ்ம்ஹற்ண்ா்ய் இங்ய்ற்ழ்ங்) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை கல்லூரியில் நேரடியாகவோ அல்லது கடன் அட்டை(கிரெடிட் காா்டு) ஏடிஎம் காா்டு, இணைய வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் சோ்க்கை நடைபெறும்.
மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினா் குழந்தைகள் மற்றும் தேசிய மாணவா் படை (ஏ) சான்றிதழ் பெற்றவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.
இந்த சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் அதற்கான தரவுகளை பதிவேற்றம் செய்யவேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரா்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் தயாா் செய்த பின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.