செய்திகள் :

Operation sindoor: இந்தியா ”ஆப்ரேஷன் சிந்தூர்" நடத்திய பின் பாகிஸ்தானியர்கள் கூகுளில் தேடியது என்ன?

post image

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இதனை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று நள்ளிரவு 1.44 மணிக்கு அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.

மொத்தம் ஒன்பது இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ”ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா நடத்திய ”ஆப்ரேஷன் சிந்தூர்” தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களை ஆட்கொண்டன, இதனையடுத்து, பாகிஸ்தான் மக்கள் அதற்கான பதில்களையும் கேள்விகளையும் கூகுளில் தேடி உள்ளனர்.

பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில் ஒன்று "சிந்துர் என்றால் என்ன"?

"ஆங்கிலத்தில் சிந்தூர் என்றால் என்ன?"

"ஆப்ரேஷன் சிந்துர் விக்கி" என கூகுளில் தேடி உள்ளனர்.

இஸ்லாமாபாத், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இருந்தும் தாக்குதல் குறித்து கூகுளில் தேடப்பட்டிருக்கிறது.

அதில் "இந்தியா ஏவுகணையை ஏவுகிறது", "இந்தியா ஏவுகணை தாக்குதல்" "இந்தியா பாகிஸ்தானை நோக்கி ஏவுகணை ஏவியது" போன்ற தேடுதல் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.

அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானின் பல பகுதிகளில் இருந்து ”வெள்ளைக்கொடி” என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளன.

வெள்ளைக் கொடி என்பது போரில் வீரர்கள் தங்கள் துப்பாக்கியில் வெள்ளை துணி அல்லது கைகுட்டையை காட்டி, தங்களின் எதிரி அல்லது பிற ராணுவத்திற்கும் போர் நிறுத்த கோரிக்கைக்கான ஒரு குறியீடாகும். அதாவது அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்க அழைப்பதாகும்.

அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தையாக ”இந்தியா போரை அறிவிக்கிறது” என இடம்பெற்றிருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையான பதட்டங்கள் முழு அளவிலான போரை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் 3 வயது குழந்தைக்கு பரிமாறப்பட்ட ஒயின்; மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம் - என்ன நடந்தது?

விமானத்தில் பயணித்த மூன்று வயது சிறுவனுக்கு விமான பணிப்பெண் ஒருவர் தவறுதலாக ஒயின் வழங்கியதை அடுத்து அந்த விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.ஷாங்காயில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தின் வணிக வகுப்... மேலும் பார்க்க

AI: மென்பொருள் கோளாறால் நிகழ்ந்த விபரீதம்; மனிதர்களை தாக்க முயன்ற ரோபோ - இணையத்தில் வைரலாகும் வீடியோ

AI (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகையே தன் வசப்படுத்திக் கொண்டு இருக்கிறது. சாதாரண புகைப்படம் எடுப்பதில் துவங்கி, உயிரைக் காக்கும் மருத்துவத்துறை வரை செய... மேலும் பார்க்க

`பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லையா?’ - நெறியாளர் கேள்விகள்; நேரலையில் திணறிய பாக்., அமைச்சர்

பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ”ஆப்பரேஷன் சிந்தூர்” எனும் தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் குறைவைத்து தாக்கப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

குடுமிப்பிடி சண்டையில் இறங்கிய பள்ளி முதல்வர் - நூலகர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன? | Video

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியின் முதல்வருக்கும் நூலகருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிர... மேலும் பார்க்க

`7 வருடங்கள் கழித்து கருத்தரித்தேன், ஆனால்...'- அலட்சிய சிகிச்சையால் இரட்டைக் குழந்தைகளை இழந்த பெண்!

L0தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள எலிமினேடு கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி. இவர் 5 மாதங்களுக்கு முன்பு ஐவிஎஃப் மூலம் கருத்தரித்திருக்கிறார். கடந்த மாதம் மருத்துவ பரிசோதனைக்காக விஜய லட்சுமி ... மேலும் பார்க்க

அல்காட்ராஸ்: தீவு சிறையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு - சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாறியது எப்படி?

சிறைச்சாலையாக இருந்து பின்னர் மூடப்பட்டு சுற்றுலாத்தலமாக செயல்பட்டு வரும் அல்காட்ராஸ் "தீவு சிறையை" மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் கடுமையான சிறைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த அ... மேலும் பார்க்க