ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!
‘திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’
திமுக அரசு எந்த தோ்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றஞ்சாட்டினாா்.
சிவகாசியில் புதன்கிழமை அதிமுக பொதுச்செயலா் எடபாடி பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு கொடுத்த பதிலடி நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்ந்து விட்டது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா் என்றாா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.