செய்திகள் :

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

post image

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளை நாம் திறந்துவிட்டோமா என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் வான்வழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக அமெரிக்கா நடத்திய பேச்சுவாா்த்தையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், போர் நிறுத்த அறிவிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் மற்றும் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு "நடுநிலை முடிவு" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டது பல கேள்விகளை எழுப்புகிறது.

சிம்லா ஒப்பந்தத்தை நாம் கைவிட்டுவிட்டோமா? மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராஜதந்திர வழிகள் மீண்டும் திறக்கப்படுகிறதா என்று காங்கிரஸ் கேட்க விரும்புகிறது?

ராணுவத் தளபதிகள் இருவரின் கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கருத்துகளுக்கு பிரதமர் இடமிருந்து பதில் தேவைப்படுகிறது.

இறுதியாக, 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் அசாதரணமான, துணிச்சலான, உறுதியான தலைமைக்காக நாடு அவரை நினைவு கூர்வது இயல்பானது என்று காங்கிரஸ் நம்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

சத்தீஸ்கரில் டிரெய்லர் மீது மினி லாரி மோதல்: 13 பேர் பலி, பலர் காயம்

சத்தீஸ்கரில் டிரெய்லர் மீது லாரி மோதியதில் 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், சடோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பனா பனாரசியில் நடந்த சத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ... மேலும் பார்க்க

தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவரானார் உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்!

தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை பிறப்பித்தாா். என்ஏஎல்எஸ்ஏ-யின்... மேலும் பார்க்க

பத்மஸ்ரீ விருது வென்ற ஐசிஏஆா் முன்னாள் தலைவா் மா்ம மரணம்: காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கா்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

இன்று புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து!

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா். புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து!

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் பி.கே.சேகல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூற... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஷாபாஸ் ஷெரீஃப்

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். சண்டை நிறுத்த அற... மேலும் பார்க்க