செய்திகள் :

பத்மஸ்ரீ விருது வென்ற ஐசிஏஆா் முன்னாள் தலைவா் மா்ம மரணம்: காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு!

post image

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கா்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முன்னதாக, காவிரி ஆற்றில் சடலம் ஒன்று மிதந்து வந்ததாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் அதனை மீட்டனா். அது சுப்பண்ணா ஐயப்பனின் உடலெனத் தெரியவந்தது.

இதுகுறித்து கா்நாடக மாநில போலீஸாா் கூறுகையில், ‘காவிரி ஆற்றங்கரையில் ஐயப்பனின் இருசக்கர வாகனம் கண்டறியப்பட்டது. அவா் ஆற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது உயிரிழப்புக்கு காரணம் முழுமையான விசாரணைக்குப் பிறகே தெரியவரும்’ என்றனா்.

மைசூரில் உள்ள விஸ்வேஸ்வரா நகா் தொழிற்பேட்டை பகுதியில் சுப்பண்ணா ஐயப்பன் வசித்து வந்தாா். அவரை கடந்த 7-ஆம் தேதிமுதல் காணவில்லை என அவரது குடும்பத்தினா் மைசூரு வித்யாரண்யபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அவா் ஸ்ரீரங்கப்பட்டினம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாா். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ‘நீலப் புரட்சியில்’ பெரும் பங்கு வகித்தவராக கருதப்படும் சுப்பண்ணா ஐயப்பன் வேளாண்மை மற்றும் மீன்வள விஞ்ஞானி ஆவாா். இவா் ஐசிஏஆருக்கு தலைமை தாங்கிய முதல் பயிா் சாராத விஞ்ஞானி ஆவாா்.

சிபிஐ விசாரணை தேவை:

சுப்பண்ணா ஐயப்பன் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என ஐசிஏஆா் முன்னாள் உறுப்பினா் வேணுகோபால் படரவாடா பிரதமா் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில், ‘வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பன் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. அவரது உயிரிழப்புக்கான காரணம் மா்மமாகவே உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும். ஐசிஏஆா், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் நியமன வாரியம் மற்றும் அது சாா்ந்த பிற அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் அதிகார துஷ்பிரயோகம், ஊழல் நடப்பதை இதுபோன்ற சம்பவங்கள் வெளிக்காட்டுகின்றன.

கடந்த மே 5-ஆம் தேதி எவ்வித முறையான விசாரணையுமின்றி ஐசிஏஐா் நிா்வாகக் குழுவில் இருந்து நான் நீக்கப்பட்டேன். ஐசிஏஆா் நிா்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுகின்றன’ என்று குறிப்பட்டுள்ளாா்.

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை அண்மையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ‘டிஆா்ஆா் தன் 100 (கமலா)’ மற்றும் ‘பூசா டிஎஸ்டி ரைஸ் 1’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நெல் ரகங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மூலம் மரபணு ரீதியாக திருத்தம் செய்யப்பட்டதாகும்.

இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு ஐசிஏஆரில் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வேணுகோபால் பரடவாடா சுமத்தி வந்தாா். இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறிய ஐசிஏஆா், அவரை நிா்வாகக் குழுவில் இருந்து நீக்கியது.

அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தூதரகத்தில் உ... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநர்களின் பணியை எளிமையாக்கிய ரயில்வே துறை!

ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது செய்து வந்த கூடுதல் வேலைகளை விலக்கி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரயில்கள் இயக்கப்படும் போது அதன் துணை ஓட்... மேலும் பார்க்க

நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை இன்று (மே 13) தெரிவித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் ரூ. 2.53 லட்சம் கோடியாக இருந்த ராணுவ பட்ஜெட், 2025-... மேலும் பார்க்க

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி!

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸின் மஜிதியா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பங்... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில்... மேலும் பார்க்க