செய்திகள் :

”திமுக ஆட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது”-சீமான்

post image

தஞ்சாவூரில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பெ.மணியரசன், சீமான், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக சீமான் பேசியதாவது, "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என கருணாநிதி முழங்கினார். ஆனால், தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என திமுக மாறிவிட்டது. மக்கள் ஆட்சியைத் தான், தன்னுடைய மக்கள் ஆட்சியாக மாற்றவிட்டனர் திமுகவினர்.

சீமான்

மாநில சுயாட்சி என பேசிக்கொண்டே மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் பறிக்கொடுத்துவிட்டனர். இன்று மாநில சுயாட்சி நாயகன் என பாராட்டு விழா நடத்துகின்றனர். தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, தமிழில் அரசாணை என கூறுகிறது. இத்தனை ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். எதற்கெடுத்தாலும் திராவிடர்கள் நாங்கள்தான் காரணம் என்கிறார்கள். நமது வாக்குகளை வாங்கிக்கொண்டு, வலிமை பெற்று அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு, இந்த இன மக்களின் உரிமைகளை பறிக்கொடுத்தவர்கள் இந்த ஆட்சியாளர்கள்.

பிரதமர் மோடி தமிழ் மொழியை பெருமையாகப் பேசுகிறார். உலக நாடுகளில் தமிழை கற்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தமிழ் இன்று இவர்களின் காலடியில் குறுகிக் கிடக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இல்லாத அதிகாரம், ஒரு நியமன உறுப்பினரான ஆளுநருக்கு எப்படி வந்தது. இது மக்கள் கோட்பாடுகளுக்கு எதிரானது. இது குறித்துப் பேசத் துப்பில்லை.

தமிழ்த்தேசிய பேரியக்கம் நடத்திய கூட்டரசுக் கோட்பாடு மாநாடு

நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என கூறியது திமுகதான். ஏனென்றால் பாஜக வின் ஏ டீம் திமுக தான். நீட் தேர்வு, ஜிஎஸ்டியைக் கொண்டு வந்தது காங்கிரஸ். கூட இருந்து கும்மி போட்டது திமுக தான். சமூக நீதி, மாநில சுயாட்சி, மாநில உரிமை எல்லாம் வெற்று வார்த்தைகள். மாநில சுயாட்சி எனக் கூறி எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்கள் திமுகவினர். கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது. அதை மத்திய அரசு எடுத்தபோது திமுக அமைதியாக இருந்துவிட்டது.

காஷ்மீரில் ராணுவ முகாம் இருந்த பகுதியில் ராணுவ வீரர்களை கொன்றது எப்படி, பின்னர் ஆதார் கார்டு எதற்கு, என்ஐஏ அமைப்பு எதற்கு. எல்லையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். பஹல்காமில் 200 கி.மீ. தூரம் எப்படி உள்ளே வந்து தீவிரவாதிகள் சுட்டனர். வந்தவர்களை இந்திய ராணுவத்தினர் சுட்டிருந்தால் அது பெருமை கொள்ளக்கூடிய விஷயம்" என்றார்.

"இனி இந்தியா என்ன செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும்..!" - Vice Admiral ஏ.என்.பிரமோத்

பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்று முப்படையையும் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விளக்கமளித்தனர்.இதுகுறித்து கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேச... மேலும் பார்க்க

"தாக்குதலின் போது பாகிஸ்தான் செய்தது மிகப்பெரிய தவறு..." - ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நேற்று இந்திய ராணுவத்தினர் விளக்கினார்கள். அதன் பின்னர், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுத்தது என்பதையும் விளக்கினார்கள்... மேலும் பார்க்க

"தனியார் துறைகள், நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு வேண்டும்" - பாமக மாநாடு தீர்மானங்கள் ஹைலைட்ஸ்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தையடுத்த திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது. இன்று மாலை நான்கு மணிக்குத் தொடங்கிய மாநாட்டில், இசை, நடன கலைநி... மேலும் பார்க்க

Operation Sindoor: "100 தீவிரவாதிகள், 40 பாக் ராணுவத்தினர் மரணம்" - முப்படை அதிகாரிகள் கூறியதென்ன?

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் இன்று முப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். 100... மேலும் பார்க்க