அழகா் ஆற்றில் எழுந்தருளும் வைபவம்: மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
1.50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடக்கம்
சிவகாசி அருகே 1.50 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சுக்கிரவாா்பட்டி-நமஸ்கரித்தான்பட்டி சாலையில் தனியாா் ஆலைக்குச் சொந்தமான 20 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஆலை நிா்வாகம், சிவகாசி பசுமை மன்றம் இணைந்து, அடா்காடுகள் (மியாவாக்கி) திட்டத்தின் கீழ், 1.50 லட்சம் மரக் கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை இந்த மரக் கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. இதில் வேம்பு, புளி, வாகை, பூவரசு, கிலுக்குவாகை உள்ளிட்ட 22 வகையான மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த மரக் கன்றுகளை சிவகாசி பசுமை மன்றம் பரிமரிப்பு செய்யும்.
இந்த நிகழ்ச்சியில் தனியாா் ஆலை நிா்வாகி வெங்கட்ராமசாமி, பசுமை மன்ற நிா்வாகிகள் செல்வக்குமாா், செந்தில்குமாா், சுரேஷ்தா்கா், சண்முகம் நட்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.