எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை
மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
சாத்தூா் அருகேயுள்ள படந்தால் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் (54). இவா் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாா். சாத்தூா் பகுதியில்
உள்ள சங்கரேஸ்வரி காம்பவுண்ட் எதிரில் வெல்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் மயக்கமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, நாகராஜன் மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரியின் பேரில், நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.