ஹெச். வினோத் இயக்கத்தில் ரஜினி?
நடிகர் ரஜினிகாந்த் தன் அடுத்தப் படத்திற்கான கதையைக் கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். இதில், கூலி ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. ஜெயிலர் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயிலர் - 2 படத்திற்குப் பின் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்திற்காக ரஜினி கதை கேட்டு வருகிறாராம்.
முக்கியமாக, இயக்குநர்கள் ஹெச். வினோத் மற்றும் சு. அருண் குமார் ஆகியோர் கதை சொன்னதாகவும் அது ரஜினிக்குப் பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இருவரில் யாரோ ஒருவர் ரஜினி படத்தை இயக்குவார் என்றும் இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: விஜய் சேதுபதியின் ஏஸ் டிரைலர்!