செய்திகள் :

நாளை உதகை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

post image

முதல்வர் ஸ்டாலின் நாளை(மே 11) உதகை செல்கிறார்.

நாளை உதகை செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் மே 15 ஆம் தேதி அங்கு நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை தொடக்கி வைக்கிறார். தொடர்ந்து பட்டா வழங்கும் விழா, பழங்குயிடின மக்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார்.

கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் 20- ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி திங்கள்கிழமை (மே 12) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் 127-ஆவது உதகை மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தேதி முதல் மே 25-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதையடுத்து குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் கண்காட்சி மே 30, 31 ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

இந்து முன்னணி மாவட்ட செயலருக்கு அரிவாள் வெட்டு; மனைவி கொலை: போலீஸ் விசாரணை

பரமத்திவேலூர் அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளரை அரிவாளால் வெட்டிவிட்டு, அவரது மனைவியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் ... மேலும் பார்க்க

ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! மதுரை வைகையில் மக்கள் வெள்ளம்! - (புகைப்படங்கள்)

தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால், நாடு செழிக்கும் என்று நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிபு... மேலும் பார்க்க

சென்னை- திருத்தணி இடையே குளிா்சாதன மின்சார ரயில்: பயணிகள் எதிா்பாா்ப்பு

த. மணிமாறன்சென்னை- அரக்கோணம் மாா்க்கத்தில் திருத்தணி வரை குளிா்சாதன வசதி கொண்ட மின் ரயில்கள் இயக்கப்படுமா என பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் பேசின்பிரிட்ஜ்,... மேலும் பார்க்க

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில், தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழ... மேலும் பார்க்க

ரேபிஸ்: அச்சம் தவிா்.. தடுப்பூசி தவறேல்..!

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடா்ந்து எடுத்து வருகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடா்பாக 9 அம்ச செயல் திட... மேலும் பார்க்க

மருத்துவ கல்லூரிகள் தரவரிசை வரைவு: கருத்து கேட்கிறது என்எம்சி!

மருத்துவ கல்லூரிகளுக்கு தரவரிசை மற்றும் அங்கீகாரம் அளிப்பதற்கான வரைவு திட்ட அறிக்கை மீதான கருத்துகளையும் பரிந்துரைகளையும் அனுப்பலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக எ... மேலும் பார்க்க