கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்
பத்ர காளியம்மன் கோயில் கயிறு குத்து திருவிழா
சிவகாசி பத்ர காளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவை முன்னிட்டு புதன்கிழமை கயிறு குத்து திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சித்திரைப் பொங்கல் விழா கடந்த ஏப். 29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, தினசரி காலை, இரவு அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா். கடந்த திங்கள்கிழமை (மே 5) நடைபெற்ற 6-ஆம் திருவிழாவின்போது அம்மன் தங்கத் தாமரையில் கங்காள சொரூப திருக்கோலத்தில் வீதியுலா வந்தாா். அன்றைய தினம் இரவு அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து, மாரியம்மன் கோயில் திடலில் கழுவேற்று லீலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை (மே 6) பொங்கல் விழா நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற கயிறு குத்து திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் அக்னிச் சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதைத்தொடந்து வியாழக்கிழமை (மே 8) தேரோட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாட்டை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.